ஸ்ரீகாயத்ரி பீடத்தில் அமைந்திருக்கும் கண் திருஷ்டி விநாயகரை, பக்தர்களாகிய நாமே கைகுவித்து வணங்கி அபிஷேகம், ஆராதனை மற்றும் மலர் மாலை சூட்டி மனதார வணங்கும் போது, நமக்கு மற்றவர்களால் ஏற்படும் கண் தொல்லைகள் அனைத்தும் அந்த கணமே தீயில் பட்டபஞ்சு போல் எரிந்து ஆகிவிடும். நம்மனதும் தெளிவாகி விடும். மனசஞ்சலங்கள் அகன்று மனநிம்மதி கிடைக்கும். இதை மனப்பூர்வமாக உணரலாம்.

கண் திருஷ்டி விநாயகருக்கும் கால பைரவருக்கும், பக்தர்களாகிய தாங்கள் பாலாபிஷேகம் செய்பவர்களுக்கு செய்யும் போது, கண்திருஷ்டி மற்றும், மற்றவர்களால் ஏவப்படும் ஷேஸ்டயோ இருந்தால் அபிஷேகத்திற்கு செய்யும் வெண்மைநிற பால் நீல நிறமாக மாறும். இந்த அற்புத நிகழ்வை அனைவரும் கண் கூடாகக் காணலாம்.