திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம். தளவாய்குளம் கிராமத்தில் ஸ்ரீ காயத்ரி பீடம், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ முருகன், ஸ்ரீ வரதயோகி பரமேஸ்வரன், ஸ்ரீ காய்த்ரிகமலா திருக்கோவில் நூதன ஆலய ஸ்ரீ காயத்ரி தேவி யந்திரம், நூதன பிம்பம் அஷ்டபந்தன மஹாசாந்தி மஹாகும்பாபிஷேக மங்கள விழா நிகழும் மங்களகரமான ஸ்ரீ சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 3-ம் நாள் (19-11-2073) ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி. திருவோணம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினம் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் தனுசு லக்கினத்தில் நடைபெறும். அதுசமயம் பக்தகோடி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து ஸ்ரீ காயத்ரிகமலா தேவி பேரருளை பெற வேண்டுமாய் ஆசீர்வதிகிறேன்.